/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாவர ஊட்டச்சத்துகள் பல்கலையில் கருத்தரங்கு
/
தாவர ஊட்டச்சத்துகள் பல்கலையில் கருத்தரங்கு
ADDED : நவ 09, 2024 11:41 PM
கோவை: உண்ணக்கூடிய பயிர்களில் ஊட்டச்சத்துகளை ஆய்வு செய்வதற்கான 'எல்.சி.எம்.எஸ்.,' -எம்.எஸ்., அணுகுமுறைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்கு, வேளாண் பல்கலையில் நடந்தது.
பல்கலை, தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், பேசுகையில், மெட்டபலோமிக் பரிசோதனை பயன்பாடு மற்றும் அளவீடுகளின் பயன் குறித்து விளக்கினார்.
விதை மைய இயக்குநர் உமாராணி தலைமை வகித்துப் பேசுகையில், பச்சை மற்றும் நுண் பச்சைகளின் மூலக்கூறு சுய விவரங்களில் உள்ள மாறுபாடுகள், இந்த மூலக்கூருகள் நியூட்ராசூட்டிகல் மதிப்பை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளமை, அவற்றைத் துல்லியமாக அளவிடுவதற்கு எல்.சி.எம்.எஸ்., பகுத்தாய்வு பயன்படுதல் ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார்.
ஸ்பின்கோ பயோடிக் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன், பல்கலை உதவி பேராசிரியர்கள் பாரதி, சரண்யா, கரோலின் ஆகியோர், கருத்துரை வழங்கினர்.
பல்வேறு கல்லூரி, ஆய்வு நிறுவனங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
உயிர் தொழில்நுட்ப சிறப்பு மைய திட்ட இயக்குநர் மோகன்குமார், உதவி பேராசிரியர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.