/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர்களின் உரிமைகள் கல்லுாரியில் கருத்தரங்கம்
/
வாக்காளர்களின் உரிமைகள் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 27, 2025 12:48 AM
கோவை; வாக்காளர் தினத்தை ஒட்டி, கோவைப்புதுாரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியின் தேசிய மாணவர் படை வாயிலாக, இந்திய தேர்தல் மற்றும் வாக்காளர்களின் உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கோவையின் மூத்த வழக்கறிஞர் நந்தகுமார் பேசுகையில், ''ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை பாமரர்களிடம் இருக்கும் அளவுக்கு படித்தவர்களிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும், பாமரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நம்பிக்கையுடன் ஓட்டுப்பதிவு செய்தாலும், அவர்களது நிலை இன்னும் உயர்ந்தபாடில்லை.
தேர்தல் நேரங்களில் ஓட்டுப்பதிவு செய்யாமல் இருந்து விட்டு, பின், ஆட்சியாளர்களை குறை கூறுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆட்சியாளர்கள் தவறான பாதைக்கு செல்ல, வாக்காளர்கள் சரியான முறையில் ஓட்டுப்பதிவு செய்யாததும், தவிர்ப்பதும் தான் காரணம். ஓட்டுப்பதிவின் வலிமையை, ஒவ்வொரு வாக்காளரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்,'' என்றார்.
கல்லுாரியின் இயக்குனர் மரகதம், முதல்வர் பன்சல் ராஜ்குமார், தேசிய மாணவர் படையின் கமாண்டிங் ஆபிசர், லெப்டினன்ட் ஆனந்த பார்த்திபன், உடற்பயிற்சி இயக்குனர் முனிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

