/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
/
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : டிச 06, 2024 11:00 PM
-- நிருபர் குழு -
'பெஞ்சல்' புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்து, 50 ஆயிரம் மதிப்பிலான, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், குடிநீர் பாட்டில்கள், போர்வை, துண்டு என, பல்வேறு பொருட்கள் சேகரம் செய்யப்பட்டன.
இந்த பொருட்கள், பி.டி.ஓ.,க்கள் சுபா, ராஜசெல்வம் ஆகியோர் தலைமையில், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
* உடுமலை தாலுகா அலுவலகம் வாயிலாக, புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு, 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5.25 டன் அரிசி மற்றும் பொருட்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியில், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.