/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூத்தோர் தடகள போட்டி; முன்பதிவு செய்ய அழைப்பு
/
மூத்தோர் தடகள போட்டி; முன்பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஆக 18, 2025 09:40 PM
கோவை; கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (கே.டி.எம்.ஏ.ஏ.,) சார்பில், மூத்தோருக்கான தடகள போட்டிகள் வரும் செப்., 14ம் தேதி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில், 30 முதல், 95 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.
நடை பயணம், ஓட்டப்பந்தய போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. ஒருவர் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம்.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். பங்கேற்க விரும்புவோர் செப்., 5ம் தேதிக்கு முன் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களுக்கு, 96887 55702, 98408 59713 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.