/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இசையில் லயித்த மூத்த குடிமக்கள்
/
இசையில் லயித்த மூத்த குடிமக்கள்
ADDED : ஜூலை 06, 2025 11:51 PM

தொண்டாமுத்தூர்; குப்பனூரில் உள்ள பரிபூர்ணா ஐஸ்வர்யம் குடியிருப்பில் நடந்த இசை நிகழ்ச்சியில், பழைய பாடல்கள் அனைவரையும் இசை மயக்கத்தில் மூழ்கடித்தது.
பரிபூர்ணா ஷெல்டர்ஸ் பரிபூர்ணா ஐஸ்வர்யம் மூத்தகுடி மக்களுக்கான குடியிருப்பு, குப்பனூரில் உள்ளது. இக்குடியிருப்பில், வார இறுதி நாளான நேற்று முன் தினம், 'ரெட்ரோஸ் சந்திப்பு' என்ற இசை நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், 1960 முதல் 1980ம் ஆண்டு வரை உள்ள, திரைப்பட பாடல்களின் 'கரோக்கி' இசையில், பாடகர் ராஜா மற்றும் பாடகி தீபா முரளி ஆகியோர், பழைய பாடல்களை அருமையாக பாடினர்.
2 மணி நேரம் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில், 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினர். குடியிருப்பை சேர்ந்த ஏராளமானோர், பழைய பாடல்களை கேட்டு ரசித்தனர்.