sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் சீனியர் ஹாக்கி லீக் போட்டி

/

மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் சீனியர் ஹாக்கி லீக் போட்டி

மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் சீனியர் ஹாக்கி லீக் போட்டி

மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் சீனியர் ஹாக்கி லீக் போட்டி


ADDED : அக் 26, 2025 08:34 PM

Google News

ADDED : அக் 26, 2025 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், 'சீனியர் ஹாக்கி லீக்' போட்டி, பி.எஸ்.ஜி., டெக்., மைதானத்தில் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், 18க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

மாருதி கல்லுாரி(எம்.சி.பி.இ.,) ஹாக்கி கிளப்(எச்.சி.,) அணியும், கே.சி.டி., அணியும் மோதின. இதில், 6-0 என்ற கோல் கணக்கில், எம்.சி.பி.இ., அணி வென்றது.

தொடர்ந்து, சுகுணா எச்.சி., அணி, 2-0 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி., எச்.சி., அணியையும், சுகுணா அணி, 2-0 என்ற கோல்களில், கே.சி.டி., அணியையும் வென்றன.

எம்.சி.பி.இ., அணி, 7-0 என்ற கோல்களில் யு.ஐ.டி., ஹாக்கி கிளப் அணியையும், பிளேஸ் எச்.சி., அணி, 4-1 என்ற கோல்களில் சி.எச்.சி., அணியையும், பி.பி.ஜி., அணி, 2-0 என்ற கோல்களில் கே.ஜி., அணியையும், காருண்யா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 16-0 என்ற கோல்களில், எச்.ஐ.டி., எச்.சி., அணியையும் வெற்றி கொண்டன.

பி.எஸ்.ஜி., கேஸ் எச்.சி., அணி, 9-0 என்ற கோல்களில் பிளேஸ் அணியையும், யு.ஐ.டி., அணி, 2-1 என்ற கோல்களில் கே.சி.டி., அணியையும், எம்.சி.பி.இ., அணி, 3-0 என்ற கோல்களில், சுகுணா அணியையும் வென்றன.

பி.எஸ்.ஜி., டெக்., அணி 'டை பிரேக்கர்' முறையில், 4-2 என்ற கோல் கணக்கில், போத்தனுார் அணியை வென்றது. காருண்யா அணி, 3-0 என்ற கோல்களில் கே.ஜி., கேஸ் எச்.சி., அணியையும், பி.பி.ஜி., எச்.சி., அணி, 5-1 என்ற கோல்களில் எச்.ஐ.டி., எச்.சி., அணியையும் வென்றன.

எஸ்.எஸ்.ஐ.இ.டி., எச்.சி., அணி, 2-0 என்ற கோல்களில் எச்.ஐ.சி.இ.டி., அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us