தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உணர்திறன் மசோதாவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!

உணர்திறன் மசோதாவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!

உணர்திறன் மசோதாவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்!


ADDED : செப் 29, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: சுற்றுசூழல் உணர்திறன் மசோதாவிலிருந்து வால்பாறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமீது அறிக்கை:

வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், நகராட்சி சார்பில் தங்கும் விடுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி தகுதியுள்ள கட்டடங்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விளக்கம் அளிக்கவும் போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.

அதே போல், வால்பாறை, ரொட்டிக்கடை, சோலையாறு அணை மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை மறுவரையறை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு சட்ட மன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us