ADDED : செப் 29, 2026 03:31 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடக்கிறது. பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர் குழந்தைவேல், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் புனிதன், உதவி தலைமை ஆசிரியர் வேல்விழி ஞானம், தலைமையாசிரியர் மரகதம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன், ஓய்வு பெற்ற சார் பதிவாளர் சிவக்குமார் பேசினர்.
உடற்கல்வி பயிற்சியை, கராத்தே மாஸ்டர் ஸ்ரீசுதாகர் வழங்கினார். பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கையுடன் இருப்பது குறித்து பேசினார்.
கராத்தே மாஸ்டர் பஞ்சலிங்கம், வார்ம் அப் பயிற்சி, கராத்தேவில் அடிப்படை தாக்குதல்கள் குறித்து விளக்கினார். மாணவர்கள் துாய்மை பணியை மேற்கொண்டனர். பறவைகளுக்கு நீர் மற்றும் உணவு வைப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டன.
