ADDED : ஏப் 09, 2026 08:17 PM
அ நிறம் | அளவு
கோவை:கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு இ.கம்யூ. சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின், திமுக வேட்பாளருக்கு கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தருவது இதுவே முதல் தடவை.
உக்கடம், அய்யாசாமி கோவில் வீதி, கெம்பட்டி காலனி, வைசியாள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று செந்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அந்த பகுதி இ.கம்யூ. கிளை மற்றும் சிங்காரவேலர் நுாலகம் கிளை சார்பில், கிளை செயலாளர் தேவேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவாட்ட செயலாளர் சிவசாமி, மத்திய மண்டல செயலாளர் கலை அஸ்வினி, மணிபாரதி, ஆட்டோ சேகர், துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
