/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் செண்டு மல்லி நாற்று
/
மானிய விலையில் செண்டு மல்லி நாற்று
ADDED : ஜன 29, 2024 11:10 PM
சூலுார்;மானிய விலையில் செண்டு மல்லி நாற்றுகள் பெற்று பயன் பெற, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சூலுார் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ், மலர்களின் பயிர் பரப்பு விரிவாக்கத்தை மேம்படுத்த, 'மேரி கோல்ட்' எனும் செண்டு மல்லிநாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு அறிக்கை:
செண்டு மல்லி குறைந்த முதலீட்டில் குறுகிய கால பயிராக பயிரிடப்படுகிறது. இது மலர்களுக்காகவும், அதன் வண்ணங்களுக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயிரிடப்படுகிறது.
இதன் நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் வழங்கும் மானியத்தை பெற, thorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் நாற்றுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர, சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். மேலும், விபரங்களுக்கு, சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை, 0422 - 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.