/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிகளுக்கு தனி இயக்குனரகம்; மாநகராட்சி அலுவலர் சங்கம் எதிர்பார்ப்பு
/
மாநகராட்சிகளுக்கு தனி இயக்குனரகம்; மாநகராட்சி அலுவலர் சங்கம் எதிர்பார்ப்பு
மாநகராட்சிகளுக்கு தனி இயக்குனரகம்; மாநகராட்சி அலுவலர் சங்கம் எதிர்பார்ப்பு
மாநகராட்சிகளுக்கு தனி இயக்குனரகம்; மாநகராட்சி அலுவலர் சங்கம் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 08, 2025 12:26 AM
கோவை; தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின், மாநில செயற்குழு கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.
மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், ஆலோசகர் சீத்தாராமன் முன்னிலையிலும் நடந்த கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், அரசு தரமயமாக்கப்பட்ட பணியாளர்களாக இருப்பதுபோல், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களையும் அரசு தரமயமாக்கப்பட்ட பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சிகளுக்கென்று, தனியே இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். அரசாணை, 152ன் படி, மாநகராட்சிகளில் இருந்து, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள், 3,417 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், பணியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மாநகராட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. எனவே, இந்த அரசாணையின்படி நீக்கப்பட்ட பணியிடங்களை, மீண்டும் மாநகராட்சிக்கு கொண்டுவர வேண்டும். புதிய பணி விதியின், புதிய பணி நிபந்தனைகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
தகுதி உடையவர்கள் பதவி உயர்வு பெறும் வகையில், புதிய நிபந்தனைகள் மற்றும் புதிய தேர்வுகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பணிவிதியில் தளர்வு செய்திட வேண்டும். அரசாணை, 21ன் படி பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.