/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதிதிராவிடர்களுக்கென தனி ஒதுக்கீடுகள்
/
ஆதிதிராவிடர்களுக்கென தனி ஒதுக்கீடுகள்
ADDED : செப் 11, 2024 10:41 PM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பயிர் வாரியாக ஆதிதிராவிடர்களுக்கென தனி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறுதானியங்களில் மாவட்ட மொத்த ஒதுக்கீடான 107 ஏக்கரில், ஆதிதிராவிடர்களுக்கு 23.75 ஏக்கரும், பயறு வகை பயிர்களில் மாவட்ட மொத்த ஒதுக்கீடான 314 ஏக்கரில், ஆதிதிராவிடர்களுக்கு 60 ஏக்கரும், எண்ணெய்வித்து பயிர்களில் மாவட்ட மொத்த ஒதுக்கீடான 125 ஏக்கரில், ஆதிதிராவிடர்களுக்கு 20 ஏக்கரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் விவசாயிகள், விதைப்பண்ணைகள் அமைக்க விரும்பும் பட்சத்தில் தங்கள் அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.--

