/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளியில் தொடர் திருட்டு; மடத்துக்குளம் மக்கள் அச்சம்
/
அரசுப்பள்ளியில் தொடர் திருட்டு; மடத்துக்குளம் மக்கள் அச்சம்
அரசுப்பள்ளியில் தொடர் திருட்டு; மடத்துக்குளம் மக்கள் அச்சம்
அரசுப்பள்ளியில் தொடர் திருட்டு; மடத்துக்குளம் மக்கள் அச்சம்
ADDED : ஆக 21, 2025 08:31 PM
மடத்துக்குளம்; கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், தொடர் திருட்டுகள் நடந்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்திலுள்ள சத்துணவு மையத்தில் கடந்த வாரம், முட்டை மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது. இது குறித்து மடத்துக்குளம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி சத்துணவு மையத்தில் இருந்த 'காஸ்' சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பள்ளியில் திருட்டுகளை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்; இரவு ரோந்து சென்று பாதுகாப்பை உறுதி செய்யவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.