/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பன் கலை மன்றம் சார்பில் 'சேவை செம்மல்' விருது
/
கம்பன் கலை மன்றம் சார்பில் 'சேவை செம்மல்' விருது
ADDED : மே 15, 2025 11:11 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின் 368வது நிகழ்வு, அரிமா சங்க கட்டடத்தில் நடந்தது. பொள்ளாச்சி தமிழிசை சங்க செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ராஜசேகர், வாழ்த்தி பேசினார்.
கோவை குருகுலம் கல்வி நிறுவன இயக்குநர் சுந்தர்ராஜ், 'மனம் வருடும் மயிலிறகாய்- கண்ணதாசன்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, 'ஈடு இணையற்ற உன்னதமான உறவு தாய் மட்டுமே. எண்ணற்ற தியாகங்கள் புரிந்து ஒரு தாய் எப்போதும் உறுதுணையாக இருக்கும் போது, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதனை கண்ணதாசனின் பாடல்கள் எடுத்துரைக்கின்றன,' என்றார்.
தொடர்ந்து, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ராஜசேகருக்கு, 35 ஆண்டு கால மக்கள் சேவையைப் பாராட்டி, 'சேவைச் செம்மல்' விருது வழங்கப்பட்டது. நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மன்றச் செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.