/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துகளை தடுக்க வேகத்தடை அமையுங்க!
/
விபத்துகளை தடுக்க வேகத்தடை அமையுங்க!
ADDED : ஜன 05, 2024 11:30 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பல்லடம் செல்லும் வழியில், உடுமலை இணைப்பு ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
பொள்ளாச்சி - பல்லடம் செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில், விபத்துகளும் அதிகரித்துள்ளன. விபத்துகளை தடுக்கும் வகையில், ரோட்டின் முக்கிய பகுதிகளில் வேகத்தடை, 'யூ டர்ன்' திசையில் சிக்னல் மற்றும் முக்கிய பகுதிகளில் குறுக்குப்பட்டை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில், உடுமலை, தாராபுரம் செல்லும் ரோட்டுக்கான, இணைப்பு ரோடு உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை இல்லாமலும், வளைவாகவும் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இப்பகுதியில் தடுமாறுகின்றனர்.
மேலும், இங்கு விபத்து அபாயம் அதிகமாக இருப்பதால், இணைப்பு ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.