/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்டெய்னர் ரேஷன் கடை அமையுங்க! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
/
கன்டெய்னர் ரேஷன் கடை அமையுங்க! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
கன்டெய்னர் ரேஷன் கடை அமையுங்க! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
கன்டெய்னர் ரேஷன் கடை அமையுங்க! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜன 15, 2024 10:06 PM
வால்பாறை:யானைகள் நடமாடும் பகுதியில் கன்டெய்னர் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், 43 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் மொத்தம், 16,520 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 7 ரேஷன் கடையை தவிர மீதமுள்ள அனைத்தும் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளன.
எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை யானைகள் இரவு நேரங்களில் இடித்து சேதப்படுத்துவதால், ரேஷன் பொருட்கள் சேதமடைவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக, ஸ்டேன்மோர், நல்லகாத்து, சின்கோனா, முடீஸ், கருமலை, நடுமலை, சிறுகுன்றா, பன்னிமேடு, நல்லமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை யானைகள் தொடர்ந்து இடித்து, பொருட்களை சேதப்படுத்துகின்றன.
அந்தப்பகுதியில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான எஸ்டேட்களில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், உலக வனப்பாதுகாப்பு மையத்தின் சார்பில், தாய்முடி, முத்துமுடி ஆகியே எஸ்டேட் பகுதியில் கன்டெய்னர் வடிவில் ரேஷன் கடை அமைக்க வனத்துறையினர் கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டத்தால் ரேஷன் பொருட்கள் உரிய நேரத்தில் வாங்க முடியவில்லை. ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில், யானைகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், வனத்துறை சார்பில் கன்டெய்னர் ரேஷன் கடை அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.