தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேத்துமடை கால்வாயில் உடைப்பு திட்டக்குழுவினர், அதிகாரிகள் ஆய்வு 

 சேத்துமடை கால்வாயில் உடைப்பு திட்டக்குழுவினர், அதிகாரிகள் ஆய்வு 

 சேத்துமடை கால்வாயில் உடைப்பு திட்டக்குழுவினர், அதிகாரிகள் ஆய்வு 


ADDED : மார் 27, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 08:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சேத்துமடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விரயமானது. உடனடியாக சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், சேத்துமடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமானது. இது குறித்து தகவல் அறிந்த ஆழியாறு நீர்தேக்கதிட்டக்குழு தலைவர் செந்தில், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் அம்சராஜ், பாசன சபை தலைவர் சுந்தரசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விவசாயிகள் கூறியதாவது:

சேத்துமடை கால்வாய் மொத்தம், 8.5 கி.மீ. நீளம் கொண்டது. வனப்பகுதியில் நான்கு கி.மீ. கால்வாய் செல்கிறது. அதில், 1.2 கி.மீ. பகுதியில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. யானை நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ள இங்கு, கால்வாயில், மர கிளைகள் போன்றவை அடைத்து இருந்ததால், நீர் தேங்கி உடைப்பு ஏற்பட்டு நீர் விரயமாகியுள்ளது.

இது வனப்பகுதியாக உள்ளதால், அதிகாரிகள், விவசாயிகள் கால்வாயை பார்க்க வனத்துறை அனுமதி பெற்றே செல்ல வேண்டியதுள்ளது. இதனால் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த கால்வாயை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கால்வாயை பராமரிக்க, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின் தி.மு.க. ஆட்சியில் நிதி வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாய் பராமரிப்பு இல்லாததால் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும், 30 நாட்கள் பாசன காலம் உள்ள நிலையில், பராமரிப்பு பணிகள் முடிய, 10 - 15 நாட்கள் ஆகும் என தெரிகிறது. கடும் வறட்சியான கால கட்டத்தில் முறையாக நீர் கிடைக்காவிட்டால் விளை பயிர்கள் பாதிக்கப்படும். கால்வாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் கூறுகையில், 'கால்வாய் சேதமான பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு உடனடியாக பணிகளை மேற்கொண்டு, பாசனத்துக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us