/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைக்கு தீ வைப்பு; குடிநீர் குழாய் துண்டிப்பு
/
குப்பைக்கு தீ வைப்பு; குடிநீர் குழாய் துண்டிப்பு
ADDED : ஜன 02, 2025 05:49 AM

மேட்டுப்பாளையம்; தேக்கம்பட்டி ஊராட்சியில், குப்பைக்கு வைத்த தீயால், குடிநீர் குழாய் உருகி துண்டித்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பெரிய ஊராட்சிகளில் தேக்கம்பட்டி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சி இரண்டாவது வார்டு குடியிருப்புகளுக்கு பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் இருந்து, ஓ.வி.சி., வாய்க்காலை (ஓரக்கரை வெங்கடசாமி செட்டியார் வாய்க்கால்) கடந்து குடிநீர் குழாய் கொண்டு செல்லப்படுகிறது.
வெல்ஸ்புரம் அருகே கதவணைக்கு செல்லும் பாதையில், வாய்க்கால் அருகே உள்ள காலி இடத்தில் பொது மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதற்கு சிலர் தீ வைத்து உள்ளனர். அந்த தீ, கூடுதுறை மலைக்குச் செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் குழாயில் பட்டு எரிந்து உருகியதால், குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கூடுதுறை மலைப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த குடிநீர் குழாயை சீரமைத்து, குடிநீர் சீராக வழங்க வேண்டும். இப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.