/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கு இலவச ஆயுர்வேத முகாம் முன்பதிவு செய்ய சேவா பாரதி அழைப்பு

ADDED : மார் 20, 2025 05:34 AM
கோவை : சேவா பாரதி சார்பில் வரும், 23ம் தேதி பெண்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.
லோக மாதா அஹில்யாபாய் ஹோல்கர், 300வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் வரும், 23ம் தேதி, ஆர்.எஸ்.புரம், சத்குரு சேவாஸ்ரமத்தில் நடக்கிறது.
இம்முகாமில், ரத்தசோகை, முறையற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு, சினைப்பை கட்டி மற்றும் பிரச்னைகள், மாதவிடாய் நிறுத்தம் சம்பந்தமான பிரச்னைகள், குழந்தை பேறு காலதாமதம், கர்ப்பப்பை கட்டி, சிறுநீர் தொற்று, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி உள்ளிட்ட நோய்களுக்கு, ஏ.வி.பி., ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும் வழங்குகின்றனர்.
கோவை மாநகர் சேவா பாரதி சார்பில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், பங்கேற்று பயன்பெற முன்பதிவு அவசியம் என்பதால், 63803 73956, 99447 11983 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, சேவா பாரதி மாநில கவுரவ தலைவர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.