/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருட்கள் ஏழு கிலோ பறிமுதல்
/
புகையிலை பொருட்கள் ஏழு கிலோ பறிமுதல்
ADDED : மே 24, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், : கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜோசப்.
நேற்று முன்தினம் ஆசாத் நகரில், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலில், சோதனை நடத்தினார். அங்குள்ள ஒரு டீ ஸ்டாலில் ஹான்ஸ், விமல் ஆகிய புகையிலை பொருட்கள், 7.4 கிலோ மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆசாத் நகர் அருகே எம்.சி.ஆர்.நகரை சேர்ந்த ரபீக் ராஜா, 33 என்பவரை கைது செய்தனர்.