/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் கடும் குளிர்; தவிக்கும் தொழிலாளர்கள்
/
வால்பாறையில் கடும் குளிர்; தவிக்கும் தொழிலாளர்கள்
ADDED : டிச 23, 2024 10:02 PM
வால்பாறை; வால்பாறையில் கடும் குளிர் நிலவுவதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பகல் நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய வெயிலும், அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இதனால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், கை மற்றும் கால்களில் பாதுகாப்பு உறை அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் உள்ள, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால், ரோட்டில் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நிலவும் கடுங்குளிரால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் நிலவும் கடுங்குளிரால், சுற்றுலா பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.