/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; பொதுசுகாதாரம் பாதிப்பு!
/
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ADDED : ஏப் 06, 2025 09:58 PM

ரோட்டில் கழிவு நீர்
கிணத்துக்கடவு, பள்ளி வாசல் அருகே, ரோட்டின் நடுவே கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் சென்று வர சிரமம் ஏற்படுவதுடன், பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து, உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- நந்தா, கிணத்துக்கடவு.
மழைநீர் வடிகால் தேவை
பொள்ளாச்சி, சுண்ணாம்பு கால்வாய் மீன்கரை ரோட்டில், குடியிருப்பு அருகே வடிகால் வசதி இல்லாததால், மழை நேரத்தில், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ரோட்டில் செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- இஷாக், பொள்ளாச்சி.
சேறும் சகதியுமான ரோடு
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி முதல், சார் பதிவாளர் அலுவலகம் வரை, சர்வீஸ் ரோட்டில், மழை பெய்ததில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால், ரோட்டில் செல்லும் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
-- பிரவீன், கிணத்துக்கடவு.
தேங்கும் மழை நீர்
பொள்ளாச்சி, ஆவல் சின்னாம்பாளையத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் லே-அவுட்டில், மழை நீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி.
வழிகாட்டி பலகை சேதம்
வால்பாறையில் இருந்து, சோலையாறு அணை செல்லும் சாலையில், ஸ்டேன்மோர் பகுதியில் ரோட்டோரம் உள்ள வழிகாட்டி பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லும் போது, வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
-- நவீன், சோலையாறு அணை.
பராமரிப்பு இல்லை
உடுமலை யு.கே.சி.நகர் துவக்கப்பள்ளி கழிப்பறை பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் கழிப்பறையை பராமரிக்க வேண்டும்.
- கிருஷ்ணன், உடுமலை.
பாதாள சாக்கடை மூடி சேதம்
உடுமலை, தாராபுரம் ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியின் மூடி சிதிலமடைந்துள்ளது. அவ்வழியாக கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. சிதிலமடைந்த மூடியால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் மூடிகளை கவனிக்கவும் முடியாமல் வாகனங்கள் அவற்றின் மீது ஏறிச்செல்கின்றன.
- ரஞ்சித், உடுமலை.
சுரங்கப்பாதையில் கழிவுகள்
உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கபாதையில் கழிவுகள் தேங்கி நிற்பதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னையால் வாகன ஓட்டுநர்கள் தொலைதுாரம் சுற்றிவந்து செல்ல வேண்டி வருகிறது. சுரங்கப்பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களும் தேங்கி நிற்கும் கழிவுகளால் தடுமாறிச்செல்கின்றனர்.
- கிருஷ்ணன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சந்தைரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. விதிமுறை பின்பற்றாமல் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல், நீண்ட நேரம் நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு வருவோரும் பாதிக்கப்படுகின்றனர்.
- ராஜேஸ்வரி, உடுமலை.
சேதமடைந்த ரோடு
கணக்கம்பாளையம் ஊராட்சி பி.வி. லே-அவுட் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி பழுதடைந்துவிடுகின்றன. மழைநாட்களில் ரோடு சேறும் சகதியுமாக மாறுகிறது. அப்பகுதி மக்கள் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
- கண்ணன், கணக்கம்பாளையம்.
வீணாகும் தடுப்புகள்
போலீஸ் செக்போஸ்ட்களில் வைப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட தடுப்புகள் வீணாக உடுமலை குட்டைத்திடலில் கிடக்கிறது. இதை பராமரித்து பயன்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவா, உடுமலை.