/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் கழிவுநீர் தேக்கம்; கேள்விக்குறியான சுகாதாரம்
/
பள்ளியில் கழிவுநீர் தேக்கம்; கேள்விக்குறியான சுகாதாரம்
பள்ளியில் கழிவுநீர் தேக்கம்; கேள்விக்குறியான சுகாதாரம்
பள்ளியில் கழிவுநீர் தேக்கம்; கேள்விக்குறியான சுகாதாரம்
ADDED : ஜன 02, 2024 11:31 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:
நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தரச்சான்று பெற்ற பள்ளியாகும். ஆனால், தற்போது பள்ளியில் புதர் அகற்றுதல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள், அவ்வப்போது பெயரளவுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகரிப்பதுடன், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளி வளாகம் துாய்மையாக இருக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.