/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்: அவதிக்குள்ளாகும் மக்கள்
/
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்: அவதிக்குள்ளாகும் மக்கள்
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்: அவதிக்குள்ளாகும் மக்கள்
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்: அவதிக்குள்ளாகும் மக்கள்
ADDED : செப் 01, 2025 07:13 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் கழிவு நீருடன், குடிநீரும் வழிந்தோடுவதால், வாகன ஓட்டுநர்களும், பாதசாரிகளும் பாதிக்கின்றனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இதில், கல்லாங்காட்டுபுதூர் முதல் கிணத்துக்கடவு மார்க்கெட் வரை சர்வீஸ் ரோடு குறுகலாக உள்ளது. இந்த ரோட்டின் ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது.
பெரியார் நகரில் உள்ள, குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட நீருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் குடிநீர், சர்வீஸ் ரோட்டோரம் உள்ள கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது. இதனால், குடிநீருடன் கழிவுநீரும் கலந்து, டி.இ.எல்.சி., பள்ளி அருகே சர்வீஸ் ரோட்டில் வழிந்தோடுகிறது. அவ்வழியில் பயணிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சர்வீஸ் ரோடு அகலப்படுத்தப்பட உள்ளது. இதனால் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு குறைவு. அதற்கு மாறாக, பெரியார் நகர், கூட்டு குடிநீர் திட்ட நீருந்து நிலையம் அருகே பழைய தண்ணீர் தொட்டி உள்ளது. இதை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
பணிகள் முடிந்த பின், நீருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் குடிநீர், இந்தத் தொட்டியில் சேமிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.
மேலும், சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணிகள் துவங்கப்படும்போது, மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.