/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர்; எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்
/
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர்; எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர்; எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்
சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர்; எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்
ADDED : ஜூன் 16, 2025 11:42 PM

கோவை; சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
n அம்பேத்கர் மக்கள் விடுதலை கழகம் அளித்த மனுவில், 'மாநகராட்சி வடக்கு மண்டலம்,19-வது வார்டு மணியகாரன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை சுற்றிலும் உள்ள புதரை அகற்ற வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கைவிட வேண்டும்' என கூறியுள்ளனர்.
n சின்னவேடம்பட்டி ஏரி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'கோவை வடக்கு பகுதியின் பிரதான நீராதாரம் சின்னவேடம்பட்டி ஏரி. கோவை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும், பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக, கழிவுநீரை சுத்திகரித்து, சின்னவேடம்பட்டி ஏரியில் விட உள்ளதாக அறிகிறோம். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என கூறியுள்ளனர்.
n தமிழ் புலிகள் கட்சி சார்பில் அளித்த மனுவில், 'காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் கட்டப்பட்டு வரும், பெரியார் நூலக வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தனர்.
n இ.ம.க., வினர் அளித்த மனுவில், 'எங்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் சூரிய பிரகாஷ், சமூகம் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அவரை, 6 மாத காலத்துக்கு மாநகர பகுதியில் இருந்து வெளியேற, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார். இதனை திரும்ப பெற வேண்டும்' என்று கூறியுள்ளனர்.