/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூர் ரோடு சுரங்கபாதையில் கழிவுநீர்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அதிருப்தி
/
கோட்டூர் ரோடு சுரங்கபாதையில் கழிவுநீர்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அதிருப்தி
கோட்டூர் ரோடு சுரங்கபாதையில் கழிவுநீர்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அதிருப்தி
கோட்டூர் ரோடு சுரங்கபாதையில் கழிவுநீர்; துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 17, 2025 09:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டூர் ரோடு ரயில்வே சுரங்கபாதையில், கழிவுநீர் அதிகளவு தேங்கி குளம் போல நிற்பதால், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் ரயில்வே கிராசிங் இருப்பதால் போக்குவரத்து வசதிக்காக, மேம்பாலம் அமைக்கப்பட்டது.அந்த பாலத்தின் கீழ் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள், பொள்ளாச்சிக்கு சென்று வரும் வகையில், சுரங்கபாதை அமைக்கப்பட்டது. நேரு நகர், பாலத்தின் கீழ் இருபுறம் உள்ள குடியிருப்பு பகுதி மக்களும் இந்த சுரங்கபாதை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதைச் சரி செய்ய சுரங்கபாதையில், தானியங்கி மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தற்போது, தானியங்கி மோட்டாரும் பழுதடைந்ததால், மாற்று மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி, மழைநீருடன் கலந்து சுரங்கபாதை பாலத்தில் தேங்கி நிற்கிறது. பாலம் முழுவதும் நிரம்பும் நிலை உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பாலத்தின் அருவி போல படிக்கட்டுகளில் கழிவுநீர் வழிந்து தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அங்குள்ள குடியிருப்பு பகுதி மக்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், கடைக்காரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி கிழக்குப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் உள்ள பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி வழியாக வந்து, கோட்டூர் ரோடு பள்ளி வழியாக பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
தற்போது, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறுகிறது.சாக்கடை நீரும், மழைநீரும் அதிகளவு வெள்ளம் போல ஓடி, சுரங்கபாதையில் குளம் போல தேங்கி நிற்கிறது.
கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலத்தில் தேங்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.