/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் எவ்வளவு வேண்டுமானாலும் தயார்
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் எவ்வளவு வேண்டுமானாலும் தயார்
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் எவ்வளவு வேண்டுமானாலும் தயார்
வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் கழிவுநீர் எவ்வளவு வேண்டுமானாலும் தயார்
ADDED : ஏப் 21, 2025 10:13 PM

கோவை,; தீ விபத்து சமயத்தில் மறு சுழற்சி நீரை பயன்படுத்தும் விதமாக, வெள்ளலுார் குப்பை கிடங்கில் இருந்த குட்டை புனரமைக்கப்பட் டுள்ளது.
உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மறுசுழற்சி செய்யப்படும் நீர் குழாய்கள் வாயிலாக, வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு, ஆறு கோடி லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள குட்டையில் சேகரிக்கப்பட்டு, பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வழக்கமாக, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சமயத்தில், குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு சுற்றுப்புறத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர், மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி, தீயை அணைத்தனர். இதுபோன்ற தீ விபத்து சமயத்தில், தீயை அணைக்க மறுசுழற்சி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இக்குட்டையில் வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, கரையும் தற்போது பலப்படுத்தப்படுள்ளது. தண்ணீர் கசிவு ஏற்படுவதை தவிர்க்க, 'தார்பாலின் ஷீட்' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், குப்பை கிடங்கு வளாகத்தில் வளர்க்கப்படும் மரங்கள், குப்பை உரமாக்கும் பணி ஆகிய தேவைகளுக்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது தீ விபத்து சமயத்தில் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இக்குட்டை புனரமைக்கப்பட்டு, மறுசுழற்சி நீர் பயன்படுத்தப்படுகிறது.
புனரமைக்கப்பட்ட குட்டையை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உதவி கமிஷனர் குமரன் உள்ளிட்டோர் நேற்று, ஆய்வு செய்தனர்.