/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாலத்தில் கழிவுநீர்; விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்!
/
ரயில்வே பாலத்தில் கழிவுநீர்; விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்!
ரயில்வே பாலத்தில் கழிவுநீர்; விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்!
ரயில்வே பாலத்தில் கழிவுநீர்; விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்!
ADDED : செப் 22, 2024 11:54 PM

ரோட்டில் குழி
பொள்ளாச்சி, நியூ ஸ்கீம் ரோட்டில் இருந்து, மகாலிங்கபுரம் செல்லும் வழியில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியில் செல்லும் வாகனங்கள், தடுமாறி செல்வதால் விபத்து ஏற்படுகிறது. ரோட்டில் உள்ள குழியை சீரமைக்க 'பேட்ச் ஒர்க்' செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -ஆனந்த், பொள்ளாச்சி.
புதரை அகற்றணும்!
பொள்ளாச்சி, 29வது வார்டில், குடியிருப்பு பகுதி அருகே ஆங்காங்கே புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும், குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பவும் தயக்கம் காட்டுகின்றனர். மாலை நேரத்தில் பூச்சி தொல்லை இருப்பதால், மக்கள் நலன் கருதி புதரை அகற்ற நகராட்சி சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சகாயராஜ், பொள்ளாச்சி.
கவனமா போகணும்!
பொள்ளாச்சி, அன்சாரி வீதியில் கால்வாய் அருகே ரோடு சேதம் அடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் இவ்வழியில் செல்ல வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மக்கள் நலன் கருதி விரைவில் இதை சரி செய்ய வேண்டும்.
-- -விஸ்வநாதன், பொள்ளாச்சி.
போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சத்திரம் வீதியில் கடைகள் முன் அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.
மண்ணை அகற்றணும்!
வடசித்தூர் - நெகமம் ரோட்டில் வேகத்தடைகள் அருகே, மழைக்கு அடித்து வரப்பட்ட மண் ரோட்டில் அதிக அளவு தேங்கியுள்ளது. இதனால் பைக்கில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் சறுக்கி விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, ஊராட்சி நிர்வாகமோ, அல்லது நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமோ மண்ணை அகற்றம் செய்ய வேண்டும்.
- -கோகுல், நெகமம்.
கழிவுநீர் தேங்கக்கூடாது!
பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில், சீனிவாசபுரம் ரயில்வே சுரங்க பாலத்தில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு பெரிய குழியும் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். தினமும் விபத்து ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்காத வகையிலும், ஓடுதளத்தை முழுமையாக சீரமைத்தும், பாதுகாப்பான பயணத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தர்ராஜ், பொள்ளாச்சி.
கழிவு நீர் தேக்கம்
உடுமலை - பழநி ரோட்டில், நீர்நிலையான தங்கம்மாள் ஓடையில் துார்வரப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதில், செடிகள், கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அதிலுள்ள கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சத்திரம் வீதியில் சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. காலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வருவதால், அவ்வழியாக பொதுமக்கள் நடந்துசெல்வதற்கும் முடியாமல் சிரமப்படுகின்றனர்.
- ராஜ்குமார், உடுமலை.
இருள் சூழ்ந்த வீதி
உடுமலை, ராமசாமிநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருக்கிறது. வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் உள்ள வேகத்தடைகளையும் கவனிக்க முடியாமல், அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். தெருவிளக்குகளை சரி செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிகண்டன், உடுமலை.
அடையாளம் இல்லை
பெரியகோட்டை ஊராட்சி காந்திநகர் இரண்டாவது வீதியில், வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள், வேகத்தடையில் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வருவோர் மீது மோதும் வகையில் தடுமாறி செல்கின்றன.
- திலகவதி, பெரியகோட்டை.
'குடி'மகன்கள் அட்டகாசம்
உடுமலை ஒன்றியம் கண்ணம்மநாயக்கனுார் அரசு பள்ளி அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில், 'குடி'மகன்கள் காலை நேரங்களிலும் மது அருந்தி விட்டு படுத்துகிடக்கின்றனர். இரவு நேரங்களில் பஸ் ஸ்டாப் நிழற்கூரையை 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு முன் மது பாட்டில்களை வீசிச்செல்கின்றனர். போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணபதி, கண்ணம்மநாயக்கனுார்.
கால்வாயை சுத்தப்படுத்துங்க
உடுமலை ஸ்ரீ நகரில் மழை நீர் வடிகால் துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், மழைநீர் செல்ல முடியாமல் ரோட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.