/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீர் தேக்கம் சுகாதாரம் பாதிப்பு
/
கழிவு நீர் தேக்கம் சுகாதாரம் பாதிப்பு
ADDED : மே 18, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் ;நெகமம் பேரூராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள கால்வாயில், கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெகமம் பேரூராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டில், வீடுகள், கடைகள் மற்றும் பள்ளி உள்ளது. இந்த பிரதான சாலையில், அண்ணா நகர் செல்லும் ரோடு, தனியார் பள்ளி அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயில், கடந்த சில நாட்களாக அதிகளவு கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதித்துள்ளது, துர்நாற்றம் வீசுகிறது, மாலை நேரத்தில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
கழிவுநீர் தேங்காமல் வெளியேறும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.