/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பை சூழ்ந்த கழிவு நீர்
/
குடியிருப்பை சூழ்ந்த கழிவு நீர்
ADDED : ஜன 16, 2025 05:27 AM

அன்னுார், : அன்னுார்-சத்தி ரோட்டில் இருந்து அல்லிகுளம், சாணம் பாளையம் வழியாக தாச பாளையம் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் கட்டபொம்மன் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சத்தி ரோட்டில் இருந்து வரும் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் கட்டபொம்மன் நகர் மக்கள் மற்றும் எதிர்ப்புறம் உள்ள விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .
இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், 'கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் வடிகால் கட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் கட்டபொம்மன் நகரின் கிழக்குப் பகுதியில் தேங்கி நிற்கிறது. கழிவு நீர் வெளியேற உரிய வசதி செய்ய வேண்டும். விவசாயத் தோட்டங்களில் கழிவு நீரால் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகின்றன.
இது குறித்து கடந்த 26ம் தேதி 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாமில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
புவனேஸ்வரி நகர் பகுதியில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். எனினும் 20 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் துவங்கவில்லை,' என்றனர்.

