/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீரால் நோய் அபாயம்; மாநகராட்சியில் புகார்
/
கழிவுநீரால் நோய் அபாயம்; மாநகராட்சியில் புகார்
ADDED : ஜூலை 29, 2025 09:08 PM
கோவை; பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் முன்னிலையில், புதுவாழ்வு மக்கள் கூட்டமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், நேற்று மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசனிடம் அளித்த மனு:
துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, சவுடாம்பிகா நகர் உள்ளது. அங்குள்ள அபார்ட்மென்ட் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு, சரியான இணைப்பு தரப்படாததால், ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுக்கிறது.
அபார்ட்மென்ட் குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இக்கழிவு நீரால், நோய் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு புகார் அளித்தபோது, குறிப்பிட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், 'குப்பை அகற்றிவிட்டோம்' என்று கூறியுள்ளனர். கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைத்து, மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டுகிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.