ADDED : அக் 13, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல்ராஜ், 30, நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு தனது தோழியுடன் வந்தார்; இருவரும் அறை எடுத்து தங்கினர்.
இரவு திடீரென கமல்ராஜ், அவரது தோழியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி உள்ளார். அவர்களின் சத்தத்தை கேட்டு ஓட்டல் வரவேற்பாளர் சங்கர், விசாரித்தார். அப்போது அந்தப் பெண், சங்கரிடம், தாங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கமல்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.