/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஜி.எப்.ஐ. நீச்சல் போட்டி தேர்வு போட்டிக்கு அழைப்பு
/
எஸ்.ஜி.எப்.ஐ. நீச்சல் போட்டி தேர்வு போட்டிக்கு அழைப்பு
எஸ்.ஜி.எப்.ஐ. நீச்சல் போட்டி தேர்வு போட்டிக்கு அழைப்பு
எஸ்.ஜி.எப்.ஐ. நீச்சல் போட்டி தேர்வு போட்டிக்கு அழைப்பு
ADDED : அக் 22, 2025 11:25 PM
கோவை: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் நடப்பு, 2025-26ம் ஆண்டுக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடக்கிறது. இதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டி, மூன்று நாட்கள் நடக்கிறது.
வரும் 28ம் தேதி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு வேளச்சேரியில் 'டைவிங்' போட்டியும், நவ., 4ம் தேதி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பெரம்பலுாரில் நீச்சல் போட்டியும், மறுநாள் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு நீச்சல் போட்டியும் இடம்பெறுகிறது.
பங்கேற்பதற்கான நுழைவு படிவங்களை, sgfiswimming@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டி நடக்கும் தினத்தில் காலை, 8:00 மணிக்கு பங்கேற்பாளர்கள் 'ரிப்போர்ட்டிங்' செய்யுமாறு, கோவை உட்பட அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும், பள்ளி கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

