/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் நிழல் இல்லாத நாள் கண்டுகளிப்பு
/
பள்ளியில் நிழல் இல்லாத நாள் கண்டுகளிப்பு
ADDED : ஏப் 16, 2025 10:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அரசுப்பள்ளியில் 'ஜீரோ ேஷடோ டே' கண்டுகளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று, மதியம், 12:21 மணிக்கு, 'ஜீரோ ேஷடோ டே' என்ற நிழல் இல்லாத நாள் கண்டுகளிக்கப்பட்டது. தலைமையாசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நிகழும் இந்த அசதிய நிகழ்வு நேற்று நடந்தது.
அந்த நாள் முழுவதும் நிழல் இல்லாமல் இருக்காது; குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நிழல் இல்லாமல் இருக்கும் என ஆசிரியர்கள் விளக்கினர்.
அறிவியல் ஆசிரியர் கீதா கூறுகையில், ''பூமி தினந்தோறும் சுற்றி வந்தாலும், எல்லா நாட்களும் சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக வருவ தில்லை. அவ்வாறு தலைக்கு மேல் நேராக வரும் போது, நிழல் பூஜ்ஜியம் ஆகிவிடும். அதவாது நிழல் காலுக்கு கீழே இருக்கும்.
இதுபோன்று, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் செங்குத்தாக வரும் போது, ஒரு பொருளின் நிழல் பூஜ்ஜியம் ஆகிறது.
அந்த நாளையே வானியல் ஆய்வாளர்கள், நிழல் இல்லாத நாள் என அழைக்கின்றனர்.
இதன் வாயிலாக பூமி சுழலும் வேகம், அட்ச ரேகை, தீர்க்க ரேகை கணக்கிடப்படும்,'' என்றார்.