/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட வாலிபால் போட்டி சக்தி கிளப் அணி வெற்றி
/
மாவட்ட வாலிபால் போட்டி சக்தி கிளப் அணி வெற்றி
ADDED : ஜூன் 01, 2025 11:32 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் இறுதிப் போட்டியில், சக்தி வாலிபால் கிளப் அணி வெற்றி பெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில், அக்வாடெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள, 32 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் 'நாக்-அவுட்' முறையில் நடந்தது.
இதில், இறுதிப்போட்டியில், கோட்டூர் மலையாண்டிபட்டணம் சக்தி வாலிபால் கிளப் அணி முதல் பரிசை பெற்றது.
இரண்டாவது பரிசை தடாகம் வாலிபால் கிளப் அணியும், மூன்றாவது பரிசை உஜ்ஜையனுார் மோகன்ராஜ் நினைவு வாலிபால் கிளப் அணியும், நான்காவது பரிசை காரமடை எஸ்.வி.ஜி.வி., வாலிபால் கிளப் அணியும் பெற்றன.

