/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹேக்கத்தானில் சாதித்த சக்தி கல்லுாரி
/
ஹேக்கத்தானில் சாதித்த சக்தி கல்லுாரி
ADDED : ஏப் 21, 2025 10:14 PM

கோவை; எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரியில் மாணவி நந்தினி, பயோடெக்னாலஜியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற, ஆந்திரப்பிரதேச மெட்டெக் மண்டலத்தின் மருத்துவ தொழில்நுட்ப ஹேக்கத்தானில் கலந்துகொண்டார். மருத்துவ தொழில்நுட்ப களத்தில் அற்புதமான தீர்வுகளை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களை தொழில்துறை நிபுணர்களுடன் இணைக்கும் வகையில் ஹேக்கத்தான் நடத்தப்பட்டது.
இதில், 'பயோபேக்கேஜிங் மெட்டீரியல்ஸ்' என்ற தலைப்பிலான மாணவியின் தனித்துவமான திட்டம் வெற்றி பெற்றதுடன், அவரது திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் நிர்வாகம், முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர் ஆகியோர் மாணவி நந்தினியை பாராட்டி வாழ்த்தினர்.