/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேர்த்திக்கடனுக்கு வாங்கிய ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதால் இறந்தன
/
நேர்த்திக்கடனுக்கு வாங்கிய ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதால் இறந்தன
நேர்த்திக்கடனுக்கு வாங்கிய ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதால் இறந்தன
நேர்த்திக்கடனுக்கு வாங்கிய ஆடுகள் மர்ம விலங்கு தாக்கியதால் இறந்தன
ADDED : மே 06, 2025 11:35 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, நேர்த்திக்கடனுக்காக வாங்கி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த, மூன்று ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதால் பலியானது.
பொள்ளாச்சி அருகே, நாதேகவுண்டன்புதுார், நா.குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
திருவிழாவில், நேர்த்திக்கடன் செலுத்த கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று ஆடுகள் வாங்கப்பட்டன. இவை, கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட இருந்தன.
நேற்று காலை, பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு திருவிழாக்குழுவினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டை மர்ம விலங்கு கடித்ததால் இறந்து கிடந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'திருவிழாவுக்காக வாங்கப்பட்ட ஆடுகள், பாதுகாப்பாக பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில், ஆடுகளின் குடல் எல்லாம் வெளியே வந்து இறந்த நிலையில் கிடந்தன.
அங்கு வந்த, வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது, கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், ஆடுகள் இறந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்து, கால்தடங்களை பார்த்துள்ளனர். அது நாயின் கால்தடமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.