/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னவேடம்பட்டியில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு 'சியா' கோரிக்கை
/
சின்னவேடம்பட்டியில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு 'சியா' கோரிக்கை
சின்னவேடம்பட்டியில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு 'சியா' கோரிக்கை
சின்னவேடம்பட்டியில் தொழில்நுட்ப உதவி மையம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு 'சியா' கோரிக்கை
ADDED : ஜன 22, 2025 12:32 AM

கோவை; சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (சியா) சார்பில், வர்த்தக மேம்பாட்டு கலந்தாய்வு கூட்டம், சின்னவேடம்பட்டியில் நடந்தது.
சங்க தலைவர் தேவகுமார் பேசுகையில், “சின்னவேடம்பட்டி பகுதியில், ஏராளமான குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் தொழில்நுட்ப உதவி மையம் அமைந்தால், அது இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அரசு ரூ.10 கோடி மதிப்பில், தொழில்நுட்ப மையம் அமைத்துத் தர வேண்டும்,” என்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசியதாவது:
குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், சிறு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும், நடுத்தர நிறுவனங்கள் பெரு நிறுவனங்களாகவும் விரிவடைய வேண்டும். அதைநோக்கியே செயல்பட வேண்டும்.
எம்.எஸ்.எம்.இ., துறையில், நிதி பெரும் பிரச்னையாக உள்ளது. வங்கிகள் 14 சதவீதம் அளவுக்கே, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு நிதியுதவி அளிக்கின்றன. இது அதிகப்படுத்தப்பட வேண்டும். இதற்காக அரசிடம் பேசி வருகிறோம்.
மின் கட்டண பிரச்னைக்கு, மேற்கூரை சோலார் மின்சாரம் ஒரு தீர்வாக அமையும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைத்துள்ளோம்; சாதகமான சூழல் தென்படுகிறது.
இந்திய அளவில், உற்பத்தித் துறை பின்னடைந்து வருகிறது. தொழில்துறையில் கோவை உற்பத்தித் துறையின் பங்களிப்பு தோராயமாக, 22 சதவீதமாக உள்ளது. ஐ.டி., துறை வளர்ந்து வருகிறது. உற்பத்தித் துறையை மேம்படுத்த, மாநில மற்றும் தேசிய அளவில் யோசித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் கோவை துணை இயக்குநர் விஜயராஜு, சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.