/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவன் அருள் சிவானந்த அனுபவம்; ஒரு நாள் பயிற்சி வகுப்பு துவக்கம்
/
சிவன் அருள் சிவானந்த அனுபவம்; ஒரு நாள் பயிற்சி வகுப்பு துவக்கம்
சிவன் அருள் சிவானந்த அனுபவம்; ஒரு நாள் பயிற்சி வகுப்பு துவக்கம்
சிவன் அருள் சிவானந்த அனுபவம்; ஒரு நாள் பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : நவ 03, 2024 11:07 PM

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே சிவன் அருள், ஒரு நாள் சிவானந்த அனுபவம் ஆன்மீக பயிற்சி வகுப்பை பேரூர் ஆதீனம் துவக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே, சின்னதொட்டிபாளையத்தில் அண்ணாமலையார் திருமண மண்டபத்தில், சிவன் அருள், சிவானந்த அனுபவம் குறித்த ஒரு நாள் ஆன்மீக பயிற்சி வகுப்பு நடந்தது.
கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். அருள் முருக அடிகளார், அரங்கநாதர் கோவில் அறங்காவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக பயிற்சியாளர் சரவணகுமார், ஆன்மீகம், ஆரோக்கியம், வாழ்வியல் நெறி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் சத்சங்கம், சிவ பூஜை ஆகியவை நடந்தன. மேலும் வாழ்வு சிறக்க, ஆரோக்கியம் பெருக, மன குழப்பம் நீங்க, மன அழுத்தம் நீங்கி நம்பிக்கையோடு வாழ்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சரவணகுமார், ராம் சுரேஷ், சத்யலீலா, நாகராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.