/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவன் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு; தினமலர் செய்தி எதிரொலி
/
சிவன் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு; தினமலர் செய்தி எதிரொலி
சிவன் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு; தினமலர் செய்தி எதிரொலி
சிவன் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஏப் 15, 2025 11:30 PM
சூலுார்; சூலுார் ஸ்ரீ தையல்நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா, மே 4ம் தேதி நடக்க உள்ளது.
சூலுார் சின்ன குளத்தை ஒட்டி அமைந்துள்ள, ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில், 1300 ஆண்டுகள் பழமையானது. சுயம்பு திருமேனியுடன் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமி, நல்ல எண்ணெய் காப்பு சாற்றி, அதை பிரசாதமாக உட்கொண்டால் பல்வேறு தீராத வியாதிகளும் தீரும் என்ற நம்பிக்கை, பக்தர்களிடையே உள்ளது.
இக்கோவிலில், கடந்த பல மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ளது. கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டது. அனுமதி தர காலதாமதம் ஏற்பட்டதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்துக்கான அனுமதியை, அறநிலையத்துறையினர் வழங்கியுள்ளனர். இதையடுத்து, மே 4ம் தேதி கும்பாபிஷேக விழா, காலை 7:00 முதல், 8:30 மணிக்குள் நடக்க உள்ளது.
தேதி முடிவு செய்யப்பட்டதால், யாக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

