/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவாலிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
/
சிவாலிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 12, 2025 11:16 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி, சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்வேதாஸ்ரீ பிளஸ் 2 பொதுத்தேர்வில், 584 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் பாடங்களில், நுாறு மதிபெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோல, 578 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடம் பிடித்த பிரீத்தி, கணக்குப்பதிவியல் பாடத்திலும், 575 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த காவியதர்ஷினி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்திலும் நுாறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
மேலும், ஸ்ரேயாஸ்குமார்ஜனா வணிகவியல் பாடத்திலும், தாரிகா, சுபஹரிணி, ஹரிஷ்மா உள்ளிட்டோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளி தாளாளர் செல்வநாயகம், இணை தாளாளர் ஸ்ரீராமு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.