/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறக்கப்பட்ட தொங்கு பாலத்தின் கைப்பிடிகள் உடைந்ததால் அதிர்ச்சி
/
திறக்கப்பட்ட தொங்கு பாலத்தின் கைப்பிடிகள் உடைந்ததால் அதிர்ச்சி
திறக்கப்பட்ட தொங்கு பாலத்தின் கைப்பிடிகள் உடைந்ததால் அதிர்ச்சி
திறக்கப்பட்ட தொங்கு பாலத்தின் கைப்பிடிகள் உடைந்ததால் அதிர்ச்சி
ADDED : அக் 21, 2025 10:41 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, திறப்பு விழாவிற்கு பிறகு தொங்கும் பாலத்தின் கைப்பிடிகள் உடைந்து விழுந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் அருகே உள்ள பகுதி திருப்பாளூர். இங்கு எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் செலவில் மின் விளக்கு, குழந்தைகள் பூங்கா, திறந்த கலையரங்கு, காயத்ரி ஆற்றின் குறுக்கே தொங்கும் பாலம் போன்றவையின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில், தொங்கும் பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் திறப்பு விழா, நேற்று முன்தினம் ஆலத்துார் தொகுதி எம்.எல்.ஏ., பிரசேனன் மற்றும் எம்.பி., ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. ஏராளமான மக்கள் அதில் கலந்து கொண்டனர்.
விழா முடிந்தபின், மேம்பாலத்தில் கைப்பிடிகள் திடீரென உடைந்து விழுந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி, அதிகாரிகள், உடன் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.