/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிக்கதாசம்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்
/
சிக்கதாசம்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்
சிக்கதாசம்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்
சிக்கதாசம்பாளையத்தில் புதிய குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்
ADDED : அக் 21, 2025 10:41 PM

மேட்டுப்பாளையம் : சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் புதிதாக அமைத்துள்ள, குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதனால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில், 30க்கும் மேற்பட சிறிய கிராமங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே, இந்த ஊராட்சியின் வார்டுகள் அமைந்துள்ளன. திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டம், சூலூர், குத்தாரிபாளையம், கரட்டு மேடு ஆகிய நான்கு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளும், மக்கள் தொகையும் அதிகம் அதனால், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லை அருகே உள்ள வார்டுகளில், 12 நாட்களுக்கு ஒரு முறையும், சில வார்டுகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறையும், குடிநீர் வினியோகம் நடைபெற்றது. பவானி ஆறு அருகே இருந்தும், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தில், ஒரு கோடியே, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கின. இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க, வெள்ளிப்பாளையம் சாலையில், கருப்பராயன் கோவில் அருகே பவானி ஆற்றில் வட்டக் கிணறு (இன்டெக் வெல்) அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆற்றில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்து, வெள்ளோட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து ஊராட்சி செயலர் மோகன்குமார் கூறுகையில், 'புதிய குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. அனைத்து மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு வரை, 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற்றது. தற்போது புதிய குடிநீர் திட்டத்தால், 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறும்,' என்றார்.