/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கணக்கெடுப்பு பணி 24ம் தேதி முதல் துவக்கம்
/
தொழுநோய் கணக்கெடுப்பு பணி 24ம் தேதி முதல் துவக்கம்
தொழுநோய் கணக்கெடுப்பு பணி 24ம் தேதி முதல் துவக்கம்
தொழுநோய் கணக்கெடுப்பு பணி 24ம் தேதி முதல் துவக்கம்
ADDED : அக் 21, 2025 10:42 PM
கோவை: கோவை மாவட்டத்தில், ஆறு வட்டாரங்களில் தொழுநோய் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு இரண்டாம் கட்ட பணிகள் வரும் 24ம் தேதி முதல் துவங்கவுள்ளன. இதற்காக களப்பணியாளர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், முதல்கட்டகணக்கெடுப்பு பணி ஆக.,1ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. இரண்டாம் கட்டமாக, காரமடை, தாளியூர், எஸ்.எஸ்.குளம், போளுவாபட்டி, நல்லாட்டிபாளையம், ஆனைமலை ஆகிய ஆறு வட்டாரங்களில் பணிகள் துவங்கஉள்ளன.
கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது:
தொழுநோய் ஒழிப்பு பிரிவு சார்பில், தொடர்ந்து களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட களப்பணியில், 21 பேர் கண்டறிந்து சிகிச்சை துவக்கியுள்ளோம்.
ஆறு வட்டாரங்களில், 2 லட்சத்து 5 ஆயிரத்து 617 வீடுகளில், 8 லட்சத்து 22 ஆயிரத்து 465 பேரை நேரடியாக சந்திக்கவுள்ளனர். இதற்காக, 367 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 குழுவுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். களப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக வருபவர்களுக்கு, பொதுமக்கள் தயக்கமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும். தொழுநோயை ஆரம்பநிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.