sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வைரமுத்து வரவேற்பு கூட்டத்தில் காலணி வீச்சு; திருப்பூரில் பெண் செயலால் பரபரப்பு

/

வைரமுத்து வரவேற்பு கூட்டத்தில் காலணி வீச்சு; திருப்பூரில் பெண் செயலால் பரபரப்பு

வைரமுத்து வரவேற்பு கூட்டத்தில் காலணி வீச்சு; திருப்பூரில் பெண் செயலால் பரபரப்பு

வைரமுத்து வரவேற்பு கூட்டத்தில் காலணி வீச்சு; திருப்பூரில் பெண் செயலால் பரபரப்பு

2


ADDED : ஜன 23, 2026 12:59 PM

Google News

ADDED : ஜன 23, 2026 12:59 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது, ஒரு பெண் தனது காலணிகளை கழற்றி கூட்டத்தின் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் இரு தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவிஞர் வைரமுத்து நேற்று காலை வந்தார். பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட கோர்ட் வளாகம் ஆகியவற்றின் நுழைவாயில் முன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைரமுத்துவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது, அடுத்தடுத்து இரு காலணிகள் பறந்து சென்று கூட்டத்துக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட பெண்ணை, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் கூறியதாவது: பல்லடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா, 50. தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளர். கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் என தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவரது மனுக்கள் சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில்லை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நாட்டு மக்களுக்கு இந்த அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று கூறி, நேற்று காலை, கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதை கவனித்த போக்குவரத்து போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். அதே நேரத்தில், வைரமுத்துவை வரவேற்க திரண்ட கூட்டத்தின் மீது அவர் தனது காலணிகளை வீசியுள்ளார். ஜெயா அடிக்கடி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுக்கள் அளிப்பது வழக்கம். சில சமயம் அவர் தனக்குத்தானே கூச்சலிட்டவாறு பேசியபடி செல்வதும் வழக்கமான ஒன்று தான். இவ்வாறு போலீசார் கூறினார்.

வைரமுத்து மீது காலணி வீசியது குறித்து ஜெயாவிடம் கேட்க முயன்ற போது, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அவரிடம் பேச, போலீசார் அனுமதிக்கவில்லை.






      Dinamalar
      Follow us