/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
/
கே.பி.ஆர்., கல்லுாரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
கே.பி.ஆர்., கல்லுாரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
கே.பி.ஆர்., கல்லுாரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
ADDED : ஜன 29, 2024 12:31 AM

கோவை;அரசூர் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியில், குடியரசு தின விழா மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மைய துவக்க விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை, டோக்கியோ - 2020 ஒலிம்பிக் போட்டியாளர் இளவேனில் வாலறிவன் துவக்கி வைத்தார்.
மாணவர்களின் தேசபக்தி நடனம், யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குடியரசு தினம் முன்னிட்டு கல்லுாரியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
கே.பி.ஆர்., கல்விக்குழுமங்களின் தலைவர் ராமசாமி, கல்லுாரி முதல்வர் கீதா, ரஷ்யா நிதி பல்கலை பொருளாதாரத்துறை பேராசிரியர் தினரா ஆர் ஒர்லோவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.