/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கீரணத்தத்தில் கடைகள் அடைப்பு
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கீரணத்தத்தில் கடைகள் அடைப்பு
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கீரணத்தத்தில் கடைகள் அடைப்பு
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கீரணத்தத்தில் கடைகள் அடைப்பு
ADDED : ஜன 30, 2025 11:30 PM

அன்னுார்:கோவை அருகே மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து, கீரணத்தம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தை சேர்ந்தது கீரணத்தம் ஊராட்சி. இதை கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக, கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து, கிராம மக்கள் கடந்த 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில், கீரணத்தம் ஊராட்சியை, கோவை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. ஊராட்சியாக தொடர வேண்டும் என வலியுறுத்தி, நேற்று பொதுநல அமைப்புகள் சார்பில், கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால், கீரணத்தம், எம்.ஜி.ஆர்., நகர், சாம்பிராணி குட்டை உள்ளிட்ட பகுதியில் பேக்கரி, ஹோட்டல், மளிகை, பேன்சி, மொபைல் ஷாப் உள்ளிட்ட 400 கடைகள் மூடப்பட்டன. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக ஊராட்சி முழுவதும் சென்று ஊராட்சியாக தொடர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
அனைத்து ஓட்டல்களும், கடைகளும் மூடப்பட்டதால், ஊராட்சியில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.