ADDED : டிச 31, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் பஜார் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வந்த ஐந்து யானைகள், அங்குள்ள மணிவண்ணன், கண்ணன் ஆகியோரின் கடைகளின் முன்பகுதி ஷட்டரை உடைத்து சேதப்படுத்தின.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் மக்கள் இணைந்து, யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டினர். இது குறித்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரீதரன் ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'முடீஸ் சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. யானைகள் நடமாட்டத்தை, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.