/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூரில் கடையடைப்பு
/
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூரில் கடையடைப்பு
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூரில் கடையடைப்பு
விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூரில் கடையடைப்பு
ADDED : ஏப் 16, 2025 01:24 AM

சோமனுார்:கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்துவரும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல பகுதிகளில் கடையடைப்பு நடந்தது.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், 750 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐந்து நாட்களாக, கோவை மாவட்டம், சோமனுாரில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
விசைத்தறியாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, சோமனுார் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லடம், காரணம் பேட்டை, சாமளாபுரம், தெக்கலுார், புதுப்பாளையம், கருவலுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடையடைப்பு நடந்தது.
மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சோமனுார், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணியர் ஆட்டோ, சரக்கு ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை.

