/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய விளையாட்டு போட்டி: பி.வி.என்., மாணவர்கள் வெற்றி
/
குறுமைய விளையாட்டு போட்டி: பி.வி.என்., மாணவர்கள் வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி: பி.வி.என்., மாணவர்கள் வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி: பி.வி.என்., மாணவர்கள் வெற்றி
ADDED : டிச 16, 2024 07:48 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.வி.என்., பள்ளி மாணவர்கள், குறுமைய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள, ஆச்சிப்பட்டி பரத் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில், மாணவ, மாணவியர், பொள்ளாச்சி மேற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
கோ-கோ, சதுரங்கம், மேஜை பந்து, பூப்பந்து, கேரம், வளைய பந்து போன்ற பல்வேறு விதமான குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று சிறப்பிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களை, பள்ளியின் செயலர் டாக்டர் ஆனந்த், தாளாளர் டாக்டர் சாந்தி, பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், டாக்டர்கள் முருகவேல், ஐஸ்வர்யா, ஸ்வாதி ஆகியோர் பாராட்டினர்.